இது வழக்கமாக பத்திரிக்கையில் வெளியாகும் சுவாரசியமான அல்லது பொழுதுபோக்கான கேள்வி பதில்கள் அல்ல. வீடு கட்டுகிறவர்கள், வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள், கட்டிட வேலையை மேற்பார்வை செய்வபர்கள், சிவில் பொறியாளர்கள், மாணவர்கள் போன்ற பலரின் எண்ணத்தில் தேங்கி நிற்கும் பல வினாக்களுக்கு எளிமையாக அழகு தமிழில் மூத்தப் பொறியாளர் திரு.அ. வீரப்பன் அவர்களால் சொல்லப்பட்ட பதில்களின் தொகுப்பு ஆகும். எது நம்பர் ஒன் சிமெண்ட்? மேற்பூச்சுக்கு ஜிப்சம் கலவை ஏற்றதா? வீடு கட்ட சிவில் பொறியியல் கற்க வேண்டுமா? சுவரில் ஏன் விரிசல்கள் ஏற்படுகின்றன? சிக்கனமாய் வீடு கட்டுவது எப்படி? கட்டுமானங்கள் வலுவிழப்பது ஏன்? நிலவறைத் தொட்டியும், கழிவறை தொட்டியும் எங்கு அமைய வேண்டும்? கிணற்றுக்கு அருகே அஸ்திவாரம் எழுப்பலாமா? பேஸ்மட்டம் நிரப்ப சிக்கனமான வழி என்ன? தாய்ச்சுவர்கள், பிரிப்புச்சுவர்கள் கனம் எத்தனை அங்குலம் இருக்க வேண்டும்? போன்று சிவில் பொறியியல் தொடர்பான 200க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு தனது அனுபவத்தின் வாயிலாக பதில் அளித்திருக்கிறார் பொறி.அ. வீரப்பன் அவர்கள். அரிதிலும் அரிய இந்நூலை வெளியிடுவதில் மட்டற்ற மிகழ்வு கொள்கிறோம்.