நமது கட்டுமானத்துறையில் செலவினங்கள் அதிகம். ஏனெனில் இங்கு ஈடுபடுத்தப்படும் துறைகள் அதிகம். மண்பரிசோதனை, பெஸ்ட்கண்ட்ரோல் எனத் துவங்கும் நமது முதற்கட்டப் பணிகள் முதல், சென்ட்ரிங், கான்கிரீட், பிளாஸ்டரிங், எலெக்ட்ரிகல், பெயிண்டிங், பிளம்பிங் போன்ற பல்வேறு வகையான தேவைகளுக்கு நாம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நாம் கட்டுநர் அல்லது காண்ட்ராக்டராக இருந்தாலும் சரி, நாமே முயன்று நமக்கென வீடு கட்டிக் கொள்வதாக இருந்தாலும் சரி. கட்டுமானச் செலவை குறைப்பதுதான் நம்முடைய முக்கிய இலக்காக இருக்கிறது. ஆனால், அதற்கான நூல்கள்தான் தமிழில் கிடையாது. இந்த நூல் உங்களை வழிநடத்தும். உங்கள் செலவினைக் கட்டுப்படுத்தும், உங்கள் உத்திகளை மேம்படுத்தும். கட்டுமானப் பொருட்களை சேதாரமின்றி சிக்கனமாகச் செலவழிக்க, பல்வேறு நூதன வழிகளை எளிய தமிழில் கூறும் இந்நூல் ஒரே ஒரு ஆசிரியரின் கருத்தினை மட்டும் கொண்டிராமல், தமிழ்நாடு முழுக்க உள்ள முதுபெரும் பொறியாளர்கள், சிவில்துறை பேராசிரியர்கள், சிவில்துறை நிபுணர்கள் என 12 பேர்களைக் கொண்ட குழுவினரின் ஒட்டுமொத்த ஆலோசனைக்ள தனித்தனி கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொன்றும் வெறும் ஆலோசனைத் தொகுப்பாக இல்லாமல். நம்முடைய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரூபாய்களை சிக்கனமாக செலவழிக்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளை நமக்கு தெள்ளத் தெளிவாக சொல்லித்தரும் அரிய நூலாக திகழ்கிறது. கட்டுமான உலகிற்கு பெரிதும் பயனளிக்கக் கூடிய இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.