உலகம் முழுமைக்கும் ஒரே ஆதாரம் மின்னியல் துறைதான். நமது நாட்டில் மின் பணியாளர்கள் அதிகம் பேர் முழுமையான கல்வி அறிவு பெறாதவர்களாக இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ நவீன கால உபகரணங்கள், மின் சாதனங்கள் போன்றவற்றை அவர்கள் கையாள வேண்டியிருக்கிறது. அவற்றைப் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாததால், அவற்றைக் கையாறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. புதிய தொழிற்நுட்பங்கள் பற்றி அவர்களுக்கு கூறுவதற்கும், புரிய வைப்பதற்கும், தக்க நூல்கள் அல்லது வழிகாட்டிகள் இங்கே இருப்பதில்லை. எலெக்ட்ரீஷியன் கையேடு என்னும் இந்நூல் நமது தாய் மொழியில் மின்னியல் துறையில் எளிமைப்படுத்திச் சொல்லும் வழிகாட்டியாகத் திகழும். மின்னியல் தெரியாதவர்களுக்குக் கூட, மின்சப்ளை எப்படி செய்யப்படுகிறது? வீட்டு வயரிங் செய்வது எப்படி? எதை, எப்படி பொருந்துவது? மின் சாதனங்களை நிறுவும் விதம் எலெக்ட்ரீசியனுக்கான கருவிகள், மின் பழுது தொடர்பான ஐயங்கள் அவற்றிற்கான தீர்வுகள், எலெக்ட்ரீஷியன்களுக்கான டிப்ஸ்கள் என ஏராளமான தகவல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூல் தொழில் முறை மின் பணியாளர்களுக்கு மட்டுமன்றி, தாமகவே வீட்டில் ஏற்படும் சிறுசிறு மின்பழுதுகளை செய்ய முயல்வோருக்கும் தக்க வழிகாட்டியாகத் திகழும் என்பது உறுதி. தொழிற்நுட்பம் சார்ந்த பல நல்ல நூல்களை வெளியிடும் பிராம்ப்ட் பதிப்பகத்தின் அணிவரிசையில் இந்த நூலும் உங்கள் அனைவரது வரவேற்பினைப் பெறும்.