நமக்கு சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை ஒருங்கே அடுக்குகிறது இந்த நூல். உதாரணத்திற்கு ‘உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா’ என்பது உங்களுக்கு தெரியுமா? ‘குதிக்க முடியாத ஒரே பாலூட்டி யானை தான்’, ‘ஹவாய் மொழியில் 12 எழுத்துக்களே உள்ளன’, ‘85 சதவீத தாவர உயிர்கள் கடலில் வாழ்கின்றன’, : மனிதனின் பாதங்களில் மட்டும் ஒரு ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.’ என வரிசையாக வியப்பூட்டும் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.எல்லாமே இது வரை பெரும்பாலானோர் அறிந்திராதவை. இப்போது அறியும் போது, அப்படியா? என கேட்க வைப்பவை. உங்களுக்கு தெரியுமா? என்னும் கேள்விக்கு கீழே நாம் அறிய வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல்கள் வரிசையாக இந்நூலில் இடம் பெறுகின்றன.