‘இயந்திரங்கள் ஆயிரம்’. இது வெறும் நூல் அல்ல. கட்டுமானத் துறையில் உள்ள கணக்கற்ற இயந்திரங்களின் ஓர் அதிசயத் தொகுப்பு இது. இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத பல்வேறு கட்டுமான இயந்திரங்களின் செயல்பாடுகள், வடிவமைப்புகள், அதன் திறன்கள் ஆகியவை இந்நூலில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்eன. ஒவ்வொரு இயந்திரம் மற்றும் கருவிகளின் புகைப்படங்களும் மேலும், அவை எங்கெங்கு தயாரிக்கப்படுகின்றன? என்கிற கூடுதல் விவரங்களும் இந்நூலினை முழுமையாக்குகின்றன. பொறியாளர்கள், கட்டுநர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள், சப்-காண்ட்ராக்டர்கள், கட்டுமானத் தொழிலாeர்கள் இவர்கள் மட்டுமன்றி தங்களுக்கென சொந்த வீடு கட்டும் பொதுமக்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். இவர்களுக்கு மட்டுமா? தொழிற்நுட்பங்களையும், தொழிற்நுட்ப இயந்திரங்களையும் ஆங்கிலத்திலேயே படித்து, படித்து மனப்பாடம் செய்து வரும், ஏராளமான தமிழ் வழி கல்வி பயிலும் நமது சிவில் பொறியியல் மாணவ கண்மணிகளுக்கும் இந்நூல் எண்ணற்ற பயன்களை தரும் என்பது திண்ணம். ஒவ்வொரு கட்டுமான அலுவலகங்களில் மட்டுமல்லாது அனைத்து கல்லூரி நூலகங்களிலும் அவசியம் காணப்பட வேண்டிய நூல் இது. கட்டுமானத் துறைக்கென்று பிரத்யேகமான நூல்கள் அவ்வப்போது வெளியிட்டு வரும் இந்நூல் நிச்சயம் அதன் மகுடத்தில் பதித்த ஒரு மணிக்கக் கல்லென திகழும் என நம்புகிறோம்.