இந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்றால் வெகு நிச்சயமாக ஸ்மார்ட் போன் எனச் சொல்லப்படும் ஆண்ட்ராய்டு போன்கள் தான். மனிதர்களுக்கான பயன்பாட்டில் முன்னனியில் இருக்கும் இந்த ஸ்மார்ட் போன்கள் நடுத்தர மக்களிடம் மட்டுமின்றி, ஏழை மக்களிடையேயும் வெகுவாக காணப்படுகின்றன. போன் என்றால் பேசுவதற்கு தான் என்ற நிலை மாறி ஏறத்தாழ ஒரு கையடக்கக் கணினியாகவே ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, அதிலுள்ள வசதிகளை தெரிந்துக் கொள்வது போன்ற அடிப்படை விஷயங்களை பெரும்பாலோர் தெரிந்து வைத்திருப்பதில்லை. இந்நூலில் ஸ்மார்ட் போன் என்பது என்ன? ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது என்ன? ஸ்மார்ட் போனில் உள்ள ஏராளமான வசதிகள் யாவை? ஸ்மார்ட் போனில் செயலிகளை மென்பொருட்களை நிறுவுவது எப்படி? போனிற்கு வரும் மெசேஜ்களை தவிர்ப்பது எப்படி? போன் தொலைந்து போய்விட்டால், தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனே செய்ய வேண்டியது, வாட்ஸ் அப் பயன்பாடு போன்ற பல்வேறு விrயங்களை தொகுத்து ஸ்மார்ட் போன் பயனாளர்களின் கையேடாக இந்நூலை உருவாக்கியிருக்கிறோம்.