தமிழில் வெளியாகும் தொழிற்நுட்ப நூல்களுள் வீடு கட்டுதல் குறித்தான நூல்கள்தான் மிகவும் அதிக மாக பதிப்பிக்கப்படுகிறது. அவை கட்டுரை வடிவிலேயோ, புத்தக வடிவிலேயோ, கேள்விdபதில் வடிவிலேயோ, எந்த வடிவில் வெளியிடப்பட்டாலும் அதற்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தருகிறார்கள். வீடு கட்டுமானம் குறித்து அறிந்து கொள்e வேண்டும் என்கிற பொதுமக்களின் ஆர்வம் தற்காலத்தில் மிகவும் அதிகரித்துவிட்டதுதான் அதற்குக் காரணம். அந்த வரிசையில் முற்றிலும் புதிய வடிவில் டிப்ஸ்களாக இந்த நூலை பிராம்ப்ட் ஆசிரியர் குழு உருவாக்கியிருக்கிறது. வீடு கட்ட திட்டமிடல், வீட்டுக்கடன் வாங்குதல், முதற்கட்டப் பணிகள், கட்டுமானப் பணிகள், அறைகளை உருவாக்குதல், இன்டீரியர் ஆலோசனைகள், தோட்டம் அமைத்தல், வாஸ்துவின்படி கனவு வீட்டினை உருவாக்குதல் என ஏராeமான தலைப்புகளில் 500க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. சொந்த வீடு கட்டும் சாமானிய மக்களுக்கு இந்நூல் ஏராeமான ஆலோசனைகçe அள்ளித்தரும் அமுதசுரபியாகும். பொதுமக்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் கட்டுமானத்துறை சார்ந்த அனைத்து மக்களுக்கும் இந்நூல் ஒரு புதையலாகும்.