காலம் மாறி வரும் இந்த வேகமான சூழலில் ஆயத்த ஆடைகள் போன்றே ஆயத்த வீடுகளும் தவிர்க்க முடியாதவை. நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் ஆயத்த வீடுகளுக்கு அடிப்படையானது பிரிகேஸ்ட் என்கிற தொழிற்நுட்பமாகும். மேல்நாடுகள் அனைத்துமே இத்தொழிற்நுட்பத்தை கடைப்பிடிக்கையில் நாம் தான் பிரிகேஸ்ட்டைப் பயன்படுத்துவதில் பின்தங்கியிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை அலமாரிகள், சன்N~டுகள் போன்றவற்றிற்கு தயார் செய்யும் கான்கிரீட் ஸ்லாபுகளை மட்டும் தான் பிரிகேஸ்ட் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பிரிகேஸ்ட் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி தூண்கள், உத்தரங்கள், தளங்கள், ஏன் ஒட்டுமொத்த வீட்டையுமே கட்டி முடித்துவிட முடியும் என்கிறார் இந்நூலசிரியர். பிரிகேஸ்ட் என்பது என்ன? அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? அதன் தரம் அறிவது எப்ப? அவற்றைக் கையாள்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? அதன் குறைபாடுகள் என்ன? என்பதை தமிழில் அழகுற எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் திரு. சுப. தனபாலன் அவர்கள. இது தொடர்பான செய்திகளையும், தகவல்களையும், ஆதாரங்களையும் திரட்டி அடுக்கி, செம்மொழியாம் தாய்மொழியில் புத்தம் புது நூலாக படைத்திருக்கும் திரு சுப.தனபாலன் அவர்களின் கடின உடைப்பினைப் பாராட்ட தமிழக கட்டுமானத்துறை கடமைப்பட்டிருக்கிறது.