அடடா கட்டிடக்கலையின் முதற்பாகத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்புதான், தொடர்ந்து இரண்டாம் பாகத்தினையும் தொகுத்து வெளியிட மாபெரும் உந்துதலாக இருந்தது. கட்டடத்துறைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இதை பெரிதும் விரும்பிப் படிப்பதை புத்தகக் கண்காட்சிகளில் என்னால் காண முடிந்தது. வட்டமான கட்டிடம், பத்து கி.மீ உயர கட்டிடம், நடுக்கடலில் சுழற் நகரம், மூங்கில் பாலம், சோலார் சாலை, செங்குத்து பாலம் என 100க்கும் மேற்பட்ட வினோத கட்டடங்களின் தொகுப்பை இந்நூலில் காணலாம். கட்டடங்கள் மட்டுமல்ல, 2014 முதல் 2016 வரை நடந்த பல்வேறு கட்டடத்துறை நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் எனவும் இந்ந்நுலில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். சிவில் பயிலும் மாணவர்களுக்கு உலகார்ந்த கட்டிட அறிவினை இந்நூல் பெரிதும் கொடுக்கும். கட்டுமானத்துறைக்கு புதியவர்களாக நுழைபவர்களுக்கு மட்டுமன்றி அனுபவம் வாய்ந்தவர்களுக்கும், கட்டிடவியல் தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், விந்தையான செய்திகளை அறிய முற்படுபவர்களுக்கும் இந்நூல் நல்ல தேர்வாக இருக்கும்.