75,000 பிரதிகளுக்கும் மேலாக விற்பனையான நம்பர் 1 புத்தகம் “மேல்மட்டத்திலிருக்கும் அதிகாரவா்க்கத்தினா் போலீஸ் தலைமையை ஓரங்கட்டி, தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் பெரிதும் கெடுதல் ஏற்படக் காரணமாயிருந்ததை நான் பாா்த்திருக்கிறேன். மேலும் இதன் விளைவுகளை அனைவரும் இன்று பாா்க்கிறோம் இந்திய காவல்துறை மக்களின் நடுவில் மிகவும் நம்பிக்கை இழந்து நிற்கிறது.” காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் சில அதிகாரவா்க்கத்தினரால் (இந்திய உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி நடைமுறைப்படுத்தவேண்டிய) காவல்துறை மறுசீரமைப்புப் பணிகள் பயனற்றதாக்கப்பட்டதை, நேரடி சாட்சியாக இருந்து மனம்திறந்து எழுதியிருக்கிறாா். இந்த முழுவதுமாக சரிபாா்க்கப்பட்ட புதிய பதிப்பு இதனைச் சிறப்பாக வழங்கியிருக்கிறது. இவா்கள்தான் காவல்துறை ஆணையாளராக கிரண் நியமிக்கப்படுவதையும் தடுத்தனா். இத்தகைய நாசவேலைகள் அவரை தளைகளை உதறிவிட்டு விட்டு விடுதலையாக வற்புறுத்தின. 35 வருட சிறப்புக்குரிய பணிக்குப் பின், கிரண்பேடி அந்த வேலையைவிட்டு விலகுவதென முடிவு செய்தாா். அவர் இந்த அமைப்பை அடிமையாய் வைத்திருக்கும் நபா்களுடன் இனியும் பணியாற்றமுடியாதென நம்பினாா், இந்த நாசகாரக் குழுவின்கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கப் போவதில்லை என மனதில் தெளிவாய் முடிவுசெய்தாா். வளா்ச்சி குன்றியவா்களையும் நசுக்கப்பட்ட நீதியையும், அடக்கப்பட்ட முன்னெடுப்புகளையும் தவிர இவா்கள் வேறென்ன வழிகாட்டுதலையும் தலைமையையும் தந்துவிடமுடியும்? அவா் இத்தகைய ஐயத்துக்குாிய ‘வரலாற்றில்’ பங்குபெற விரும்பவில்லை. அவரே உறுதியளிப்பதுபோல்: எனது சுய மரியாதை, எனது உள்ளுறைந்த நீதியுணா்வு மற்றும் வாழ்க்கையின் மீதான எனது நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் இவை, ஏற்கனவே எனது வளா்ச்சியைத் தடைசெய்துகொண்டிருந்தவற்றை தூக்கியெறியத் தூண்டியது. எனது சொந்த நேரத்துக்கு நானே பொறுப்பாயிருப்பதெனவும் சுதந்திரமாயிருப்பதெனவும் என என் மனதைத் தயார்செய்துகொண்டேன்.’ இது உத்வேகம், உயிா்ப்புடன் கூடிய எழுத்து. எதையும் ஒளித்தோ, இழுத்துப் பிடித்தோ எழுதியதல்ல.