இன்று இந்தியாவில் அறுபது மில்லியனுக்கும் (ஆறு கோடி) மேற்பட்ட இதய நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அபாயகரமான அளவில் வளர்ந்துவருகிறது. இதய நோய்களை உருவாக்கும் பதினைந்து காரணங்களில் குறைந்தபட்சம் பத்து காரணங்களாவது உணவுமுறை சார்ந்ததாக உள்ளது. இதய தமனி அடைப்புகளின் இரண்டு பிரதான பகுதிகள் கொழுப்பினிகளும், கொழுப்புகளும் ஆகும். இவை இரண்டும் நமது உணவு முறையின் மூலம் உடலுக்கு வழங்கப்படுகின்றன. உணவு முறையானது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் அடர்த்தி குறைந்த கொழுப்பினி ஆகியவற்றை பாதகமான முறையில் பாதிக்கிறது. சில வகையான உணவு அடர்த்தி அதிகமுள்ள கொழுப்பினியை அதிகரிக்கச் செய்கிறது. தமனி இதய நோயின் வளர்ச்சியை நிறுத்தவும் தடை செய்யவும் அல்லது சில நிலைகளில் உயிர்க்கொல்லியாக மாறும் தமனி அடைப்பைக் குறைக்கவும் உணவுமுறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை மேலேயுள்ள காரணிகள் பரிந்துரைக்கின்றன. இந்த உணவு முறை மேம்படுத்துதலைப் பற்றி அனைவரும் ஒப்புக்கொண்டாலும், பொதுமக்களில் பெரும்பாலோர் இதய மருத்துவர்களிடமிருந்து போதுமான அறிவுரையைப் பெறுவதில்லை. பெரும்பாலானோர் உணவுமுறை நிபுணர்களிடம் சென்றாலும் தங்களது வாழ்நாள் முழுவதும் பின்பற்ற முடியாத உணவுமுறை அட்டவணையோடேயே நின்றுவிடுகின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு இந்த புத்தகம் ஒரு கொடையாகும். இது அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளிக்கூடிய சிறந்த உணவுமுறை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதான மற்றும் தெளிவான முறையில் விளக்கமளிக்கிறது. உணவுமுறை பற்றிய கேள்விகள் - கலோரி அளவின் கணக்கீடு, உணவுமுறை தொகுப்பு, பல்வேறு உணவுகளில் உள்ள கொழுப்புப் பொருட்களைப் பற்றிய விபரம் மற்றும் இதயத்திற்கு எது நன்மையானது எது தீமையானது போன்ற அனைத்திற்கும் படிப்பவர் நண்பர் என்ற முறையிலும் எளிதான முறையிலும் பதிலளிக்கப்பட்டுள்ளது.