logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
Murasoli
Murasoli
  • Murasoli 22.10.2016
  • murasoli.in
  • Issues 13
  • Language - Tamil
  • Published daily

About this issue

News

About Murasoli

                                          முரசொலி                  கலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது. திராவிடர் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்து வருகிற முரசொலிக்கு இது மணிவிழா ஆண்டு மணிவிழா ஆண்டு என்பதால் இவ்வேட்டின் அறுபது ஆண்டு காலப் பணிகளை நினைவு கூர்வதும் அதன் சிறப்புகளை மீண்டுமொரு முறை அதன் வாசகர்களிடையே எடுத்து வைப்பதும் ஒரு வரலாற்றுத் தேவையே ஆகும். முரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக அடியெடுத்து வைத்த ஏடாகும். அது இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கலைஞரது 18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. கிராப்ட் தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது. முரசொலியின் தலைப்பின் மீது ‘V’ என்று போடப்பட்டுள்ளதை பார்க்கலாம். உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் வெற்றிக்கு அறிகுறியாக Victory என்ற சொல்லின் முதலெழுத்தைப் போட்டு முரசொலி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு வந்தன. முரசொலி பிறக்கும் போதே முகத்தில் வெற்றியைப் பொறித்துக் கொண்டே பிறந்த ஏடாகும். எந்த அற்பங்களும் அந்த ஏட்டை வெற்றிகொள்ள முடியாது. மூர்த்தி சிறிதாயினும் தொடக்கக் காலத்திலேயே இதன் கீர்த்தி மிகப் பெரியது. முரசொலி துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்களில் அவரின் பள்ளியிறுதி தேர்வு முடிவுறாமல் இருந்தது. அதனால் அவரது இயற்பெயரை அத்துண்டறிக்கையில் போட்டுக் கொள்ளாமல் சேரன் என்ற புனை பெயரில் கலைஞர் கருணாநிதி மறைந்திருந்தார். இத்துண்டறிக்கை ஏட்டை வெளியிட முரசொலி வெளியீட்டுக் கழகத்தினர் திருவாரூர் என்கிற அமைப்பை நண்பர்கள் குழாத்திடையே அவர் ஏற்படுத்தினார். அதற்குச் செயலாளராக திரு. கு. தென்னன் அவர்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டார். கலைஞர் சிந்திப்பதை செயற்படுத்த அந்த இளமைக் காலத்திலேயே ஒரு குழு அவர்பின்னே திருவாரூரில் இருந்தது. அவர்களில் முதன்மையானவர் தென்னன் இவரன்றி எந்தப் பணியையும் கலைஞர் திருவாரூர் வாழ்க்கையின்போது நிறைவேற்றியதில்லை. முரசொலி துண்டறிக்கைகளை வெளியிட பணம் திரட்டுவதும் திரட்டிய நிதிக்கேற்ப ஆயிரம் பிரதிகளுக்கு குறையாமல் அச்சிடுவதும் நிதி அதிகம் கிடைக்குமானால் ஆயிரத்திற்கு மேலும் அச்சிடப் படுவதுமுண்டு. அப்படி அச்சிடப்பட்டதை தமிழகம் முழுவதுமுள்ள இயக்கத் தோழர்களுக்கு அனுப்பி வைப்பதுமான பணிகளே தொடக்கக் காலத்தில் நடந்தன. இத்துண்டறிக்கையை கிருஷ்ணா பிரஸ் - திருவாரூர் என்கிற அச்சகத்தினர்தான் முதன் முதலில் அச்சிட்டனர். இதன் உரிமையாளரின் பெயர் கூ.ழு. நாராயணசாமிப் பிள்ளை. இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவரது வாரிசுகள் திருவாரூரில் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களது அச்சகத்தில்தான் முரசொலி துண்டறிக்கை இதழ் முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. கலைஞரின் முரசொலி அறிக்கைகளை காங்கிரஸ்காரரான நாராயணசாமி பிள்ளை அச்சிட்டு தந்தது வியப்பையே அளிக்கிறது. அதுவும் அந்நாளில்? அதற்கு காரணம் என்ன? கலைஞர் அந்த இளமைப் பருவத்திலேயே மற்றவர்களை தம்முடைய ‘வாக்குத் திறத்தாலே’ கவருகின்ற ஆற்றலைப் பெற்றிருந்தார். நாராயணசாமி பிள்ளை கலைஞரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடி மகிழ்வதிலே இன்பம் கண்டவர். இத்துண்டறிக்கைகள் ‘கனமான’ விஷயங்களையே தாங்கி வந்தன. திருவாரூரை விட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவி சிதம்பரம் வரை அதன் புகழ் பரவலாயிற்று. சிதம்பரத்து தீட்சதர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை தான் ‘வருணமா? மரணமா?’ என்பது இக்கட்டுரை கலைஞர் எழுதியதால் தமது சொந்த பயணமாக கூட சிதம்பரம் செல்ல முடியாத நிலையை அது உருவாக்கியது. ஆம், சிதம்பரத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவே கலைஞரின் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த வெற்றியை அவருக்கு முரசொலியே டவ .ட்டிக் கொடுத்தது. முரசொலி முதலாம் ஆண்டு விழாவை (1943) பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களையும் அழைத்து நடத்தினார் கலைஞர். இப்பணிகள் இப்படி நடந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே கலைஞர் ‘சாந்தா அல்லது பழநியப்பன்’ என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதனால் கலைஞருக்கு நாடகத் துறையோடு டவ .டுபாடு தொடங்கியது. முரசொலி துண்டறிக்கை இச்சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் கலைஞரின் முரசொலி மீண்டும் 14-1-1948 முதல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த முதல் முரசொலியின் வடிவம் - துண்டறிக்கை என்ற நிலையிலிருந்து மாறியிருந்தது. ‘கிரவுன் சைஸில்’ பருவ இதழுக்குரிய நிலைப்பாட்டைப் பெற்று வார இதழாக முரசொலி வெளிவந்தது. துண்டறிக்கையாக வெளிவந்த முரசொலியிலும் - திருவாரூரில் வார இதழாக மலர்ச்சியுற்ற முரசொலியிலும் ‘பெரியார் ஆண்டு’ என காலத்தை கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியதே முரசொலி தான் முரசொலி வார இதழாக வெளியிடப்பட்டபோது அவ்விழாவிற்கு பாவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். முதல் இதழை கரந்தை சண்முகவடிவேல் வெளியிட்டார். திருவாரூரில் வெளியிடப்பட்ட முரசொலி கருணாநிதி மின்னியக்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வச்சக உரிமையாளர் கருணை எம். ஜமால் இயக்கத் தோழர் என்றாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். அவரது கறார் குறித்து பின்னாளில் கலைஞர் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அச்சிட்ட இதழ்களை அவர் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார். அதற்காக ஒரு ‘குழுவே’ அவரிடம் போராடியது உண்டு. எப்படியோ இதழ்கள் வெளிவந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிடும். திருவாரூர் முரசொலி குறித்து கலைஞர் தமது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியிலும் உடன் பிறப்புக்கான மடல்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அப்போது அவர்பட்ட துன்பங்களை விவரித்து கூறியுள்ளார். திருவாரூரிலிருந்து வெளியிடப்பட்ட முரசொலி வார இதழ் என்பது நெடிய ஆயுளை உடையதல்ல. சற்றொப்ப 25 இதழ்கள் வெளியிடப்பட்டிருக்கும் - என்கிறார் தென்னன். இவ்விதழ்களில் பதினான்கையே பார்க்க முடிந்தது. அந்நாள்களில் இருந்த மிகப் பெரிய அச்சியந்திர வளர்ச்சி என்பது மின்னியகத்தில் ஓடிய அச்சியந்திர வசதியாகும். எழுத்து கோக்கும் வசதி சாதாரணமானதுதான் (Hand Composing) இந்த வசதிகளைப் பெற்றே திருவாரூர் முரசொலி (வார ஏடு) வெளிவந்தது. இப்பத்திரிகையில் கலைஞர், இராம. அரங்கண்ணல், டி.கே. சீனிவாசன், வா.கோ. சண்முகம் (மா. வெண்கோ) என்.எஸ். இளங்கோ, நா.பாண்டுரங்கள், தில்லை வில்லாளன் ஆகியோர் எழுதினர். முரசொலி, இளைஞர்களிடையே திராவிடர் இயக்க உணர்ச்சியை ஊட்டுகின்ற ஒரு படைக்கலனாக அறிமுகமாயிற்று. அதன் வீச்சு போர்க் குணத்தையும் கிளர்ச்சித் துடிப்பையும் வளர்த்தெடுத்தது. இவ்விதழ் ஓரணா விலையில் (8 பக்கங்கள்) கிடைத்தது. ஓரணா என்பது இப்போதைய ஆறு காசுகளுக்கு சமமானது. சில பொது 12 பக்கங்கள் ஒன்றரை அணா விலையில் வெளியிடப்பட்டு வந்தது. திருவாரூர் வார வெளியீட்டில் கலைஞர் சில கட்டுரைகளை எழுதினார். அவர் எழுதிய “சொர்க்க லோகத்தில்” எனும் கட்டுரை சுவையுள்ளவை. வரலாற்றுச் சிறப்புமிக்க தூத்துக்குடி மாநாட்டின் போது (1948) நடிகவேள் எம்.ஆர். ராதா அறிஞர் அண்ணா அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து கலைஞர் வருந்தி ‘நடிகவேள் நாட்டில் நஞ்சு கலந்தார்’ எனத் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை திருவாரூர் முரசொலியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்நாள்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முரசொலி ஏடு கலைஞரின் திரைப்பட நுழைவால் தடை படலாயிற்று. அதன்பிறகு 1954-இல் சென்னையிலிருந்து வார வெளியீடாக வெளிவரத் தொடங்கியது. 1960-ஜூலை வரை இவ் வார வெளியீடுகள் தொடர்ந்தன. ஆறாண்டுகள் தொடர்ந்து முரசொலி வார ஏடு தி.மு.கழகத்தார் நடத்திய பல பத்திரிகைகளில் முன்னணி பத்திரிகையாய் விளங்கிற்று. முரசொலியில் வெளிவந்த படைப்புகள் அத்தனையும் உரித்த பலாச் சுளையாய் இனித்தன. கலைஞரின் எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்கு கடிதம், சுழல் விளக்கு போன்ற பகுதிகள் கிளர்ச்சித் துடிப்பை உண்டாக்கின. கலைஞர் சிலபோதுத் தலையங்கங்களை எழுதினார். (புதுக்)கவிதைகளை எழுதினார். தொடர்கதைகள் எழுதினார். சிறுகதைகளை எழுதினார். குறளோவியத்தை முதன் முதலில் கலைஞர் முரசொலியில்தான் எழுதினார். எழுத்துகளின் அத்தனை வடிவங்களையும் ‘முரசொலி’க்காக பயன்படுத்தினார். கலைஞர் தாமாகவே கற்றறிந்து எழுதப் பழகிக் கொண்டவர். அதற்காக மாணவ நேசனும் (பள்ளி நாள்களில் கலைஞரே வெளியிட்ட கையெழுத்துப் பிரதி ஏடு) முரசொலி துண்டறிக்கைகளும் அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தன. அதனால் அவர் பல வடிவங்களை எழுதினார். இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி “கல்கி”யில் சக்கரவர்த்தி திருமகன் எனும் பெயரில் இராமாயணத் தொடரை எழுதி வந்தார். இத்தொடரை விமர்சனம் செய்து கலைஞர் முரசொலியில் எழுதினார். அக்கட்டுரைத் தொடருக்கு ‘சக்கரவர்த்தியின் திருமகன்’ எனும் தலைப்பைச் சூட்டி தமது பெயரை ‘மூக்காஜி’ என வைத்துக் கொண்டார். இத்தொடர் அக்கால கட்டத்தின் அரசியலையும் அதில் இராஜாஜியின் பங்கினையும் நகைச்சுவையுடன் விவரிக்கிறது. கலைஞர் தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பாகவே ‘சென்னை இராஜ்ஜியத்திற்கு’ ‘தமிழ்நாடு’ என பெயரிட வேண்டும் என்பது குறித்து இரண்டு பக்க கட்டுரையை முரசொலியில் (6-4-1956) எழுதினார். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் கலைஞரது ‘இளமைப்பலியை’ முதன் முதலாக வெளியிட்டு கலைஞரை உற்சாகப்படுத்தியது. தொழிலாளர் மித்ரனிலும், குடியரசிலும் கலைஞர் எழுதினார். தொடக்க காலத்திலேயே கலைஞரது எழுத்துகள் பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மதிப்பைப் பெற்றன. 1938-இல் எழுதத் தொடங்கிய கலைஞர் இன்னமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அதன் விளைவாக அவர் கட்டுரைகள், கேள்வி-பதில், சிறுகதைகள், கடித இலக்கியம், கவிதைகள், சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பிற இலக்கிய வடிவங்கள், ஓரங்க நாடகங்கள், பெரும் நாடகங்கள், திரைப்படங்கள் என அவர் எழுதியவை தமிழ் மக்களின் நினைவில் என்றும் நின்று நிலைப்பவை ஆகும். கலைஞரின் பல்துறை ஆற்றல்களின் செயற்பாடு தான் முரசொலியின் நிலைபெற்ற வெற்றிக்கு காரணமாகும். அவர் எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் முரசொலியோடு தொடர்புகொண்டு அதன் வெளியீட்டு வடிவம் குறித்து - உள்ளடக்கம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்ததில்லை. ஆலோசனைகளை அவர் வழங்காமல் இருந்ததில்லை. அவரது பத்திரிகை டவ .டுபாடு குறித்து காமராசரே வியந்து போற்றி இருக்கிறார். உவமைக் கவிஞர் சுரதாவின் கருத்து செறிவு மிக்க கவிதைகள் முரசொலியில் வெளிவந்தன. சொர்ணம் சிறுவர் சிறுமிகளுக்கான ‘பிறை வானத்தை’ எழுதினார். மாறனின் சிறு உருவங்கள்தான் முதன் முதலில் எழுதியதாக காணப்படுகின்றன. அவரது முதல் சிறுகதை காட்டுப் பூனை. ஆனால் அப்போதே முரசொலி வார இதழில் அவரது முழு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற இரண்டு தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. கிரேக்க புராணம், கலைத்தோட்டம் என்ற தொடர் கட்டுரைகள்தான் அவை. அந்தக் கட்டுரைகளில் எழுதியவரின் பெயர் இல்லை. நாம் அதனை கேட்டறிந்து கொண்டோம். கிரேக்கப் புராணம் - நம்நாட்டில் இருக்கிற இதிகாசங்களை நினைவுப்படுத்தியது. கலைத்தோட்டம் உலகச் சிந்தனையாளர்களை இலக்கியச் சிற்பிகளை வாரந்தோறும் - அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகளன்றி அரசியல் விமர்சன கட்டுரைகளையும் ஒரு சிலபோது தலையங்கப் பகுதிகளையும் மாறன் எழுதினார். திராவிட இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கொள்கை விளக்க கட்டுரைகள் இவரது சீரிய ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தின. முரசொலி பொங்கல் மலர்களிலும் அண்ணா மலர்களிலும் இவரது சிறந்த அரசியல் கட்டுரைகளும் ஓரங்க நாடகங்களும் இடம் பெற்றுள்ளன. முரசொலி சென்னையிலிருந்து வார ஏடாக வரத் தொடங்கியதற்குப் பிறகு அதன் அலுவலகங்கள் பல இடங்களில் செயல்பட்டு பிறகு அப்போதைய மௌண்ட் ரோட்டில் இயங்கத் தொடங்கிற்று. அதாவது இப்போது சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இருக்குமிடத்தில்தான் முரசொலி பழைய கட்டிடம் இருந்தது. முரசொலி அலுவலகம் இங்கு வந்ததற்குப் பிறகுதான் கண்ணதாசனின் ‘தென்றல்’ அலுவலகமும் கே.ஏ. மதியழகனின் ‘தென்னகம்’ அலுவலகமும் அதே வரிசையில் இடம் பெற்றிருந்தன. இம்மூன்று அலுவலகங்களின் மேலும் கருப்பு சிவப்பு வண்ணத்தில் தி.மு.கழகக் கொடி கம்பீரமாக பறந்து அந்நாளைய ‘மௌண்ட் ரோட்டை’ அசத்திய காட்சி கழகத் தோழர்களையெல்லாம் அற்புதக் காட்சியாக காணச் செய்தது. முரசொலி (சென்னை) வார ஏடு தொடங்கிய 7 மாதங்களில் தமிழக மக்களிடையே ஓர் இடத்தைப் பெறத் தொடங்கிற்று. அதனால் ஒரு சிலர் அதில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து அனுமதியில்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து வந்தனர். அதற்கான அறிவிப்பை 5-11-1954இல் முரசொலி வெளியிட்டு அத்தகைய வெளியீட்டாளர்களை எச்சரிக்கை செய்தது. 1954 முதல் 1960 வரையான முரசொலி வார ஏட்டில் பலர் அறிமுகப்படுத்தப்பட்டனர். எழுத்துத் துறைக்கு பழையவர்களானாலும் அவர்களுக்கும் முரசொலி ஒரு முன்னுரை வழங்கத் தவறவில்லை. சிறுகதை மன்னன் என்றும், கலைஞரால் சின்ன மருது என்றும் போற்றப்பட்ட எஸ்.எஸ். தென்னரசு முரசொலியில் முதல் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து வர்ணனைத் திறத்தால் உரை வளர்த்தால் நாளும் சிறப்பெய்தும் ஏ.கே. வில்வம், சிவ. இளங்கோ, அடியார், கயல் தினகரன், மா. பாண்டியன் போன்றோர் முரசொலியில் பங்கு கொண்டனர். முரசொலி வார ஏட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பலரில் மூன்று பேரை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாஞ்சிலார் பற்றி 25-6-1954 முரசொலி, “தோழர் நாஞ்சில் மனோகரன் அவர்கள் கழக முன்னணி வீரர் - எழுத்தாளர் - பேச்சாளர் என்பது மட்டுமல்ல சிறந்த கவிஞருங் கூட என்பதை தனது எழுச்சி மிக்க கவிதைகளால் சொல்லாமல் சொல்லுகிறார். அவரது கவிதைகள் முரசொலியில் இனி அடிக்கடி இடம் பெறும்” என கலைஞர் அறிமுகக் குறிப்பு எழுதியுள்ளார். அடுத்து 30-7-1954 முரசொலி வார ஏட்டில் சுரதாவின் கவிதையை வெளியிடுகின்றார் கலைஞர். அக்கவிதைக்கு அவர் ஒரு முன்னுரை - அறிமுக உரை எழுதினார். அவ்வுரை வருமாறு :- “படுத்திருக்கும் வினாக் குறிபோல் மீசையுண்டு தமிழ் வளர்த்த பாண்டியர்க்கு” என்று ஒருமுறை கூறி கவிதா மண்டலத்தின் பாராட்டுதலை பெற்ற, தோழர் சுரதா பாரதிதாசனின் நேர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது மாணவருங் கூட வளமான சொற்கள் சுரதாவின் கவிதை வரிகளில் பொங்கி வழிவதை நாம் காண முடியும். பாரதி பாட்டு போன்ற பழைய தமிழ் ஏடுகளை பக்கத்திலே வைத்துக்கொண்டு பாட்டெழுதும் பழக்கமுடையவரல்ல. பல நாட்கள் காலத் திரையால் மறைக்கப்பட்டிருந்த அந்த நண்பரின் கவிதைகளை வாரந்தோறும் நீங்கள் சுவைக்கலாம் (கவிதையழகை காணுங்கள் - “விழி, முடிக்கும் காதல் திருமணம்” என்று குறிப்பிடுகிறார். ஆகா... புரோகிதரின் ஜாதகம் முடிவு செய்யும் திருமணமல்ல. பெற்றோரும் குறுக்கிட்டு முடிப்பதல்ல விழிகளே முடித்து விடுகிறதாம். இதுபோன்ற பொருள் ததும்பும் நீண்ட வாக்கியங்களை ஒரே வார்த்தையில் சொல்லும் முறை சுரதாவுக்கு தனிப்பண்பு) முரசொலிக்கு இருக்கிற இன்னொரு சிறப்பை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சுயமரியாதை இயக்க காலத்தில் குடியரசில் எழுதிய பாரதிதாசன் தொடர்ச்சியாக எழுதினாரில்லை. ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோரின் கவிதைகளும் சில இதழ்களில் அவ்வப்போது இடம் பெறும். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் முகப்புக் கவிதைகள் நிரம்ப இடம் பெற்றதுண்டு. அவற்றில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் தொடர்ச்சியாக அவர் ஒருவரின் பாடல் மட்டும் வாரந்தோறும் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. அதாவது அவர் தொடர்ந்து எழுதினாரில்லை. பொதுவாகவே கவிஞர்களிடம் கவிதை பெற்று வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முரசொலி வார ஏட்டில் அதுவும் சுரதாவிடம் 30-7-1954 தொடங்கி 22 வாரங்களுக்கு (ஓரிரு வாரங்கள் தவிர்த்து) கவிதைகளைப் பெற்று தொடர்ந்து வெளியிட்டு இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ‘ஆனந்த விகடன்’ இதழில் கூட சுரதா சற்றொப்ப 17 வாரங்கள்தான் எழுதினார். இவ்வகையில் ஒரே கவிஞரின் பாடல்களை அந்தக் காலத்தில் அதிகமாக வெளியிட்ட பெருமை முரசொலியையே சாரும். இன்னும் பல பொருள்களைப் பற்றி நிரம்ப புத்தகங்கள் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் பி.சி. கணேசனை முரசொலி பின்வருமாறு அறிமுகப்படுத்தியது. “தோழர் பி.சி. கணேசன் (பி.எஸ்.சி.பி.டி.) அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் மற்றைய தென்னாட்டு திலகங்களைப் பற்றியும் ‘சுதந்திரா’ ஆங்கில இதழில் ஒப்பற்ற கட்டுரைகளை தீட்டியவராவார். இந்தக் கட்டுரையில் அவர் பாரதிதாசன் கவிதைகளை விமர்சிக்கிறார்.” இவர் விட்டும் தொட்டும் சில கட்டுரைகளை முரசொலியில் எழுதியிருந்தாலும் இவர் எழுதிய “மனிதனின் கதை” எனும் தொடர் கட்டுரை மிகச் சிறந்த கட்டுகளாகும். அவற்றில் அவர் உலக வரலாற்றை - சிந்தனையாளர்களை - இன்ன பிற செய்திகளையெல்லாம் தொகுத்து அளித்த சிறப்பு என்றும் மறக்க முடியாதது. இப்போதும் முரசொலியைப் புரட்டினால் அக்கட்டுரைகளை படிக்கலாம். 1948-களில் முரசொலியில் ஒரு எழுத்தாளர் வரிசை உருவானது போலவே 1954-60களில் சென்னை வார இதழ்கள் வெளிவந்த நாள்களில் இயற்கை கடனை அடைத்துவிட்ட நாஞ்சில் மனோகரன், மாறன், முல்லை சத்தி, எஸ்.எஸ். தென்னரசு, சுரதா, ஏ.கே. வில்வம், சொர்ணம், அமிர்தம், செல்வம், சிவ. இளங்கோ, அடியார் ஆகியோரின் எழுத்து வடிவங்கள் இடம்பெற்று ஓர் எழுத்தாளர் வரிசை உருவாக முரசொலி காரணமாக இருந்தது. முரசொலி சென்னையிலிருந்து வார இதழாக மலர்ச்சியுற்று வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தி.மு.கழக ஏடுகள் பல வெளி வந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் கொள்கையை எடுத்து விளக்குவற்காக ஒவ்வொரு கோணங்களில் தகவல்களை முன் வைத்து இயங்கின. அவைகளை இயக்கிய பெரும்பாலோர் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லுவதற்கான முயற்சியோ பின்புலமோ அல்லது அதனை செம்மையாக வெளியிடக்கூடிய நிலையோ இல்லாதவர்களாகவே இருந்தனர். எப்படி இருப்பினும் முரசொலி ஏடு தி.மு.கழகத் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது. தி.மு.கழகத்தின் மன்றங்கள், படிப்பகங்களிலேயும் ‘முரசொலி’ வார இதழுக்காக காத்திருந்து வாசகர்கள் படிப்பர். சில இடங்களில் முன்பின் என்ற வரிசை கருதி படிப்பதற்கு வாசகர்களிடையே சிறு சர்ச்சைகளம் நிகழுவதுண்டு. முரசொலி வார வெளியீட்டில் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் விதமாக அதன் உள்ளடக்கம் ஒரு சிறப்புத் தன்மை பெற்றிருக்கும். படிப்பதற்குரிய பகுதிகளின் பெயர்கள் - தலைப்புகள் வாசகனை கவர்ந்திழுத்தது. முரசொலி ஒரு பொதுப் பத்திரிகை என்கிற தன்மையிலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் அது தி.மு.கழகத்தின் கொள்கை வழி நின்று பத்திரிகை களத்தில் போராடியது போராடியும் வருகின்றது. அதனால்தான் எதைப் பற்றியும் முரசொலியில் எழுதுவது சாத்தியமானாலும் அதற்கு ஓர் அளவுகோலாக எந்த விஷயம் பற்றி எழுதினாலும் ‘கழகத்தை’ அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் முரசொலி இயங்கியது இயங்கியும் வருகிறது. முரசொலியின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான கலைஞர் இயற்கையின் மைந்தர் பிறவி எழுத்தாளர் எதையும் கலை வடிவப்படுத்தி சொல்வதில் அவருக்கிணை அவரே இளமை பருவந்தொட்டே அவரோடு இரண்டறக் கலந்துவிட்ட அந்த உணர்வுதான் முரசொலியின் மூலதனங்களில் முதன்மையானதாகும். முரசொலி திராவிடர் கழக ஏடாக திகழ்ந்த போதும் திராவிட முன்னேற்றக் கழக ஏடாக திகழ்ந்து வருகின்ற போதும் விஷயங்களை அது எடுத்து வைக்கிற பாங்குதான் சிதையாச் சீரிளமை திறமுடையதாக திகழ்ந்து வருகிறது. கலைஞர் ஆசிரியர் என்ற முறையில் அதன் வாசகர்களை உருவாக்கி விடுவதோடு இல்லாமல் அதனைப் பற்றிய விமர்சனங்களையெல்லாம் கேட்டறிவதில் ஆர்வம் காட்டி இதழை செம்மைப்படுத்தினார். வளர்த்தெடுத்தார் புகழுக்குரிய ஏடாக வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தினார். முரசொலி வார இதழில் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கிற்று. முரசொலி சென்னை வாரப் பதிப்பின் முதல் இதழிலேயே (2-5-54) எழுத்தாணி கேள்வி பதில்கள் இடம் பெற்றிருந்தன. ‘சுழல் விளக்கு’ எனும் பகுதி 10-12-54 முதல் வெளி வரலாயிற்று. இப்பகுதியில் விமர்சனக் கட்டுரைகளும் கேள்வி-பதில்களும் இடம் பெற்றன. கலைஞர் கடிதம் இன்றைய தினம் தமிழ்நாட்டை இயக்குகிற சாதனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இம்முறையை இவர் 30-7-1954இல் தொடங்கினார். அப்போது அரசியல், இலக்கியம் மற்றும் இதரப் பிரச்சினைகளை ‘பொன்முடிக்கு கடிதம்’ என்கிற தலைப்பில் சுவை சொட்ட சொட்ட எழுதினார். கலைஞர் ‘நீட்டோலை’ என்கிற பெயரில் ஒருகடிதத்தை அறிமுகப்படுத்தினார். இக்கடிதம் 18-5-1956 முதல் முரசொலியில் இடம் பெற்றது. மறவன் மடல்கூட முரசொலி நாளேட்டில் (11-1-69)தான் அறிமுகமாயிற்று. இம்மூன்று கடித வடிவங்களுக்குப் பிறகே ‘உடன் பிறப்பே’ என கலைஞர் விளித்து எழுதும் தற்போதைய கடித வடிவம் வெளி வரலாயிற்று. கலைஞரின் ‘பேனா ஓவியம்’ அரசியல் கலைக் களஞ்சியமாகும். முரசொலியில் வெளியாகும் வாசகர்களின் கடிதங்கள் ‘உங்கள் பார்வை’ என்ற தலைப்பில் தற்போதும் வெளியிடப்படுவதை காணலாம். இப்பகுதி 22-4-1955 முதல் முரசொலியில் இடம் பெறலாயிற்று. முரசொலியில் மேலும் சுவையை அளித்த பகுதிகள் ‘இயல் இசை கூத்து’ ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்பவைகளாகும். இப்பகுதிகள் முறையே 8-4-1955, 22-6-1955 ஆகிய இதழ்களில் தொடங்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘இயல் இசை கூத்துப்’ பகுதியில் திரையுலகச் செய்திகள், விமர்சனங்கள் சிலபோது அது தொடர்புடைய கட்டுரைகள் இடம் பெற்றன. அவை திரையுலகச் செய்திகளை தருவதோடல்லாமல் அத்துறையின் சில வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாய் இடம்பெற்றிருந்தன. ‘நில், நண்பா எங்கே ஓடுகிறாய்’ என்ற கட்டுரை உரையாடுவது போன்ற அமைப்புடையது. கழகத் தோழனும் காங்கிரஸ் தோழனும் சந்தித்துக்கொண்டு உரையாடுவது என்ற போக்கில் இடம் பெற்றுள்ள அந்த கட்டுரைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் முரசொலியில் இடம்பெற்று வந்தன. நாளேடான பிறகும் சிலபோது வெளியிடப்பட்டு வந்தது. இக்கட்டுரைகள் அடிமட்ட கழகத் தோழரை டவ .ர்ப்புக்குரியவராக்கிற்று. அதில் எழுதப்பட்ட தகவல்களை கலை நிகழ்ச்சிகளாக்கி மேடைதோறும் இசைத்தவர்களுமுண்டு. ஒருவருக்கொருவர் பேசுகிறபோது அதில் எழுதப்பட்டுள்ளவைகளை விவாதித்துக் கொண்டதுமுண்டு. முரசொலி வார இதழ்கள் சிலபோது கலைஞரின் கவிதை நடை சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதுண்டு. குறளோவியம் அதன் வீச்சாக தோன்றிற்று எனலாம். அவர் எழுதிய முதல் குறளோவியம் முரசொலி வார வெளியீட்டில் இடம் பெற்றதே ஆகும். முரசொலியின் தலையங்கங்கள் கழகத்தவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த அரசியற் கல்வியைப் புகட்டியது. தலையங்கப் பகுதிக்கு மேலே இயக்கக் கொள்கைகளை இருவரிகளில் முழக்கமாக்கி (கவிதை வரிகளில்) கலைஞர் வெளியிட்டு வந்தார். அந்த முழக்கங்களை வாய்விட்டு பிறர் கேட்க படித்தாலோ முழங்கினாலோ படித்வர்க்கும் கேட்பவர்க்கும் - அம்முழக்கத்தின் பால் டவ .டுபாடு தோன்றாமல் இருக்க முடியாது. முரசொலியின் கேலிச் சித்திரங்கள் (கருத்துப்படம் - கார்டூன்கள்) மிகச் சிறப்பானவை ஆகும். அவை கால நிலைக்கேற்ப கருத்துக்களை எதிரொலிப்பனவாகவும் தி.மு.கழகத்தின் நிலைப்பாட்டில் நின்று கொள்கைகளை விளக்குவனவாகவும் இருந்தன. அதே நிலைப்பாடு இப்போதும் முரசொலியில் தொடருவதைக் காணலாம். முரசொலியின் கேலிச் சித்திரங்கள் பல சந்தர்ப்பங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கழகத் தொண்டர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் அதன் தாக்கம் சிறப்பிற்குரியதாய் இருந்தது. தி.மு.கழகத்தில் டவ .வெ.கி. சம்பத் அறிஞர் அண்ணாவின் காலத்தில் (1961) ஒரு பிளவை ஏற்படுத்தினார். இந்தப் பிளவை பிரச்சார ரீதியில் தி.மு.க. எதிர்கொண்டது. பத்திரிகைகள் பிளவை ஆதரித்தன. பெரிதுபடுத்தின. இந்து, மெயில், மித்திரன், நவஇந்தியா, தினமணி போன்ற பத்திரிகைகளுக்கு தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்களுக்கு ‘தீபாவளிப் பண்டிகையைப்’ போன்றே சிறப்புக்குரியதாக இருந்தது. தி.மு.கழகத்தின் நாளேடுகளாக நம்நாடும், முரசொலியுமே களத்தில் நின்றன. முரசொலியை நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலை உருவான இந்தச் சூழ்நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையை தொடர்ந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தச் சூழ்நிலையிலும் அறிஞர் அண்ணா அவர்களுடைய கட்டளையை ஏற்று முரசொலியை தொடர்ந்து வெளியிட்டு வந்தார் கலைஞர். இந்தக் கால கட்டத்தில் முரசொலி இதர நாளேடுகளைப் போல காலையில் நம் கைக்கு கிடைத்து விடக்கூடிய சூழ்நிலையில் வெளிவரவில்லை. சென்னையில் கடைகளில் கிடைப்பதற்கு காலை 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இருப்பினும் அப்போதைய கழகத் தோழர்கள் முரசொலியை வாங்கிப் படிப்பதை ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட்டார்கள். அப்போது டவ .வெ.கி. சம்பத்தின் கருத்துகளுக்கு எதிராகவும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவும் முரசொலியில் கட்டுரைகள், கேள்வி-பதில்கள், பெட்டி செய்திகள், கேலிச் சித்திரங்கள் என வெளியிட்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றிய பெருமை முரசொலிக்கே உண்டு. தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தி.மு.கழகம் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பிப்ரவரி 20, 1956இல் பெரியதொரு வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்திற்று. தேவிகுளம் - பீர்மேடு என்பது தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய எல்லைப்புற ஊர்கள். அதனை கேரள மாநிலம் தன்னோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட போராட்டம் இது. அதனை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் என்பது தமிழர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்ததால் அந்தப் போராட்டத்தை - வேலை நிறுத்ததை முன்னின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போராட்டம் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு கருத்தறிவித்திருத்தார். “இந்த கண்ணியம் மிகுந்த கூட்டணியைக் கண்டு திகில்கொண்டு, கூட்டணி மீது மெத்த கோபம் கொண்டிருக்கிறார், சென்னை மாநிலத்தை ஆள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் காமராசர் அவரது கோபத்தைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். அவரது போக்கினை தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கடந்த பிப்.20இல் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதால் ” அறிஞர் அண்ணாவின் இக்கருத்தை வெளியிட்ட முரசொலி 24-2-1956-இல் தமிழர் கிளர்ச்சி என்ற தலையங்கத்தை விளக்கமாக எழுதியது. அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை அத்தலையங்கம் சிறப்புற விளக்கிற்று. முரசொலி வார வெளியீட்டில் நகைச்சுவைப் படங்கள் துணுக்குகள் என நிரம்ப இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் மகாபாரதக் கதையை ‘படங்களாக’ வரைந்து (அதன் ஆபாசத்தை விளக்கும் பொருட்டு) வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் அதனை முழுவதுமாக வெளியிட முடியவில்லை. (மகாபாரதம் ஆயிற்றே ) தி.மு.கழகத்திற்கு வலுவை உண்டாக்குவதற்காக அதன் கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் உடன்பாடான கேலிச்சித்திரங்களை ‘சங்கர்ஸ் வீக்லி’ ‘சுதேசமித்திரன்’ ‘தினத்தந்தி’ ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகளிலிருந்து திரும்ப எடுத்து முரசொலியில் மறுவெளியீடு செய்வதும் அதற்கு அடிக்குறிப்பு எழுதுவதும் முரசொலியின் சிறப்புகளில் ஒன்றாகும். தி.மு.கழகத்தார் நடத்திய மற்ற பத்திரிகைகளில் இத்தகையச் சிறப்பை தொடர்ந்து காணமுடியாது. இன்றும் முரசொலியில் இந்தச் சிறப்பைக் காணலாம். முரசொலி வார ஏடாயிருந்த கால கட்டத்திலேயே கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இரங்கற் குறிப்புகளையும் செய்திகளையும் தலையங்கங்களையும் எழுதி வெளியிட்டு தமிழ் இன உணர்வை முரசொலி போற்றி வளர்த்ததை சிறப்பாக குறிப்பிட வேண்டும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாவலர் பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் இயற்கையோடு இணைந்தபோது முரசொலி, அவர்கள் குறித்து அந்நாள்களில் வழங்கிய புகழ் மலர்களை வெளியிட்டு பத்திரிக்கை துறையில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியது. முரசொலியின் சிறப்பு வெளியீடுகளாக பொங்கல் மலர், அண்ணா மலர் என வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவை சிறப்பிதழ்களாக மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இம்மலர்களைப் பற்றிய தகவல்களை தொகுப்புரையுடன் தனித் தலைப்பின் கீழ் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. முரசொலி 17-9-1960 முதல் நாளேடாக வெளிவரலாயிற்று. அதன் பணிகள் முன்னிலும் அதிகமாயிற்று. முரசொலி வணிக நோக்குடைய நாளேடல்ல. அது ஒரு இயக்கத்தின் கொள்கையை, கருத்துக்களை, சமுதாயத்தில் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்ல வந்த ஏடாகும். இதன் பலமும் பலவீனமும் இதுதான் முரசொலி நாளேடாக தொடங்கப்பட்ட நாட்களில் ‘நம்நாடு’ தி.மு.கழகத்தின் அதிகார பூர்வமான ஏடாக செயல்பட்டு வந்தது. அது 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தாலும் அதன் பரப்பு விரிந்த அளவுடையதாய் இல்லை. ‘நம்நாடு’ மாலைப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. அதுவும் சிறிய அளவில் வெளியிடப்பட்டு வந்தது. நம்நாடு இதழின் வளர்ச்சி குறித்து முரசொலி (வார) ஏடு ‘நம்நாடு நமது ஏடு’ எனும் தலையங்கத்தை எழுதி - அதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘தனி அரசு’ இதழும் நாளேடாக மலர்ச்சியுற்று 1959 முதல் வ